வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நஸ்ரியா
‘நேர்கொண்ட பார்வை’க்கு பின் அஜித், வினோத் கூட்டணி அமைத்துள்ள படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி திரை வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை நஸ்ரியா சமீபத்தில் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் வலிமை என்ற சொல்லை அவர் பயன்படுத்தி இருந்ததால், அவர்தான், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடிக்க போவதாக செய்தி பரவியது.
ஆனால், அதை நஸ்ரியாவே தற்போது மறுத்திருக்கிறார். வலிமை படத்தில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நான் நடிக்க இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை. இன்னும், எதுவுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, தற்போதைய நிலையில், இந்த வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம் என கூறியிருக்கிறார். இருந்த போதும், நடிகை நஸ்ரியாவிடம் படக்குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர். ஒரு சில நாட்களில், நஸ்ரியா வலிமை படத்தில் நடிக்கிறாரா, இல்லையா என்பதை படக்குழுவே உறுதி செய்துவிடும் என்றும் சொல்கின்றனர்.