விஜய் படத்தை நிராகரித்த தேவதர்ஷினி
கடந்த ஆண்டு வெளியான 96, சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3’ என வரிசையாக வெற்றிப் படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தேவதர்ஷினி. தளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்து முடித்து இருக்கிறார். அந்த செய்தி சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
அக்டோபர் மாதம் `96’ ரிலீஸ் ஆன நேரத்தில் என் மகளை தளபதி 63 படத்தில் நடிக்க முடியுமா என்று அட்லீ கேட்டார். `இப்போதான் 96 படம் நடிச்சி முடிச்சிருக்காங்க. மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு வருது. அதுக்கு அவங்க தயாராகணும்‘னு சொன்னேன். அதை புரிஞ்சுக்கிட்டார்.
கண்டிப்பாக எந்த ஒரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும், தளபதிகூட நடிக்க ஆவலாகத்தான் இருப்பாங்க. என் மகளுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. படத்தை விடவும், இப்போது படிப்பு ரொம்ப முக்கியம். அதனால்தான் இப்போதைக்கு வேண்டாம்னு சொன்னேன். பிறகு கொஞ்ச நாள் கழித்து, `விஜய்க்கு அக்கா கேரக்டரில் நீங்க நடிக்க முடியுமான்னு கேட்டாங்க. ஓ.கே சொன்னேன். என்னுடைய ஷெட்யூல் பிப்ரவரி மாசமே முடிஞ்சிடுச்சு. ஐந்து நாட்கள் நடிச்சு முடிச்சிட்டேன். என்னுடையது முக்கியமான கேரக்டராக இருக்கும்’. இவ்வாறு அவர் கூறினார்.