‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் தான் வில்லனா? – இயக்குநர் சிவா பதில்
இயக்குநர் சிவா அஜித்தை வைத்து இயக்கும் 4 வது படமாக உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ நாளை வெளியாகியுள்ள நிலையில், அஜித் டிரைலரில் தன்னை தானே வில்லன் என்று கூறுவது பெரும் எதிர்ப்பார்ப்பையும், கேள்வியையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், படம் குறித்து பேட்டி ஒன்றில், அஜித்தின் அந்த வசனம் குறித்து பேசிய இயக்குநர் சிவா, “ஒவ்வொரு மனிதனுடைய கதைக்கும் அந்த அந்த மனிதன் தான் ஹீரோவாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் அஜித் தன்னுடைய கதையில் தன்னை வில்லன் என்கிறார். இது நிச்சயம் ரசிகர்களுக்கு ஆவலை தூண்டும். இந்த கேள்விக்கான பதிலை கதை கொடுக்கும். படத்தில் இருக்கும் முக்கிய திருப்பம் அது.
இந்த கதையை கேட்டு பிடித்த பிறகே அவர் சம்மதித்தார். படம் முழுக்க அவர் இருப்பார். படத்தில் கதையை சொல்வதே அவர் கதாபாத்திரம் தான்.” என்று தெரிவித்துள்ளார்.