வேளாண் சட்டத்தின் நன்மைகள் குறித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய பா.ஜ.க முடிவு
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தமிழக பா.ஜனதா சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முக்கிய தலைவர்கள் மாவட்ட வாரியாக பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்து இருப்பதாக ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் மாநில தலைவர் எல்.முருகன், காரைக்குடியில் எச்.ராஜா, ஓசூரில் மாநில துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரன் ஆகியோர் சந்திக்கிறார்கள்.
நாளை (12-ந் தேதி) தஞ்சாவூரில் மாநில துணைத்தலைவர் முருகானந்தமும், நெல்லையில் நயினார் நாகேந்திரனும் கோவையில் விவசாய பிரிவு தலைவர் ஜி.கே.நாகராஜீம் சந்திக்கிறார்கள்.
நாளை மறுநாள் (13-ந் தேதி) முன்னாள் எம்.பி. நரசிம்மன் சேலத்திலும், சுப.நாகராஜன் ராமநாதபுரத்திலும், கரு.நாகராஜன் வேலூரிலும் சந்திக்கிறார்கள்.
14-ந் தேதி (திங்கள்) நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தென்காசியில் குப்புராமு ஆகியோர் சந்திக்கிறார்கள்.