Tamilசெய்திகள்

அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் 15-ந்தேதி (செப்டம்பர்) அண்ணா பிறந்த நாள் விழாவை தி.மு.க. மிக சிறப்பாக கொண்டாட உள்ளது. இந்த விழாவுடன் தி.மு.க. தொடக்க நாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளது.

இந்த விழா முடிந்ததும் தி.மு.க.வுக்கு டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தையும் திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் 16-ந்தேதி டெல்லி செல்ல உள்ளார். 17-ந்தேதி விழா நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விட்டு மறுநாள் சென்னை திரும்புவார் என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்… ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய அதிபர் எங்கே இருக்கிறார்?