Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. உலகின் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவ் தொடக்க சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெயின் கோசலவை எதிர்கொண்டார். இதில் ரஷிய வீரர் மெட்வதேவ் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் 5-வது வரிசையில் உள்ள கேஸ்பர் ரூட் (நார்வே) 10-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), 6-வது வரிசையில் உள்ள அகுஜர் அலிஸ்மி (கனடா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

4-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) முதல் சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். கொலம்பியாவை சேர்ந்த டேனியல் காலன் 6-0, 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் சிட்சிபாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். காலன் தகுதி சுற்றில் வென்று முன்னேறியவர் ஆவார்.

இதேபோல ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் முதல் சுற்றில் வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற வீரான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது வரிசையில் உள்ள அன்ட் கோனடாவிட் (எஸ்டோனியா), 23-வது வரிசையில் உள்ள கிரஜ்கோவா (செக்குடியரசு) லைலா பெர்னாண்டஸ் (கனடா), 5-வது வரிசையில் இருக்கும். ஜபேஷா (துனிசியா) ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.