Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றில் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, ரஷியாவின் ரோமன் சபியுலின் – கஜகஸ்தானின் ஆண்ட்ரூ கொலுபேவ் ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.