Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது

ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற துடுப்பு படகு போட்டியில் ஆண்கள் காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர். ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித்குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர்.

உஸ்பெகிஸ்தான் தங்கப் பதக்கமும், சீனா வெள்ளிப் பதக்கமும் வென்றது. இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.