Tamilசெய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,67,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 42 ஆயிரத்து 859 குறைவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1192 பேர் உயிரிழந்துள்ளனர். 2,54,076 பேர் சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ளனர்.மேலும்  17,43,059 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு விகிதம்  நேற்று 15.77  இருந்தது.கடந்த 24 மணி நேரத்தில் இது 11.69 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுவரை  1,66,68,48,204 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.