Tamilசெய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 35,871 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,74,605 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 172 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,216 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,63,025 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 17,741 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,52,364 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 3,71,43,255 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.