Tamilவிளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை – ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் டிக்கெட் விற்பனை

இந்தியாவில் வருகிற அக்டோபர்- நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மோடி மைதானத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ-க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியானது.

இந்நிலையில், உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுக்கான ஆன்விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.

மேலும், பிசிசிஐ 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் அனைத்து சங்கங்களிடமிருந்தும் டிக்கெட் விலை நிர்ணயம் குறித்த ஆலோசனைகளை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதுகுறித்து பிசிசஐ கெளரவ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், ” அட்டவணை மாற்றத்திற்காக மூன்று உறுப்பினர்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேதிகள் மற்றும் நேரங்கள் மட்டுமே மாற்றப்படும். மைதானங்கள் மாற்றப்படாது. ஆட்டங்களுக்கு இடையே ஆறு நாட்கள் இடைவெளி இருந்தால், அதை 4-5 நாட்களாக குறைக்க முயற்சிக்கிறோம். 3-4 நாட்களில் இது தெளிவாகிவிடும். ஐசிசியுடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் நடக்கும்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி தொடர்பாக, நான் முன்பு கூறியது போல், சில உறுப்பினர் வாரியங்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. விரைவில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.