Tamilவிளையாட்டு

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி வீரர் மேக்ஸ்வெல் விலகல்?

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 15.3 ஓவரில் இலக்கை 199 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வி மூலம் ஆர்சிபி அணி 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆர்சிபி அணிக்கு பின்னடைவாக அமையும். ஆர்சிபி – சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.