Tamilவிளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – இந்திய வீரர் ஷுப்மன் கில் 4வது இடத்துக்கு முன்னேற்றம்

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று முன் தினம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷுப்மன் கில் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னாள் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ராஸி வான் டெர் டுசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

மற்றொரு பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் 3-ம் இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்தில் நீடிக்கிறார்.