Tamilவிளையாட்டு

கனடா ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி – இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார். இந்தப் போட்டியில் ஜானிக் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.