Tamilசென்னை 360

கலாக்ஷேத்ரா

கிழந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசக் குடும்பம் இந்தியாவைப் பிடுங்கிக் கொண்ட பிறகு, விக்டோரியன் அறநெறி தரநிலைகள் (Victorian Morality) என்ற பார்வையைக் கொண்டு இந்தியப் பழக்க வழக்கங்கள் சமுதாயத்தால் மறு ஆய்வு செய்யப்பட்டன.

அப்படித்தான் 1930களில் நடனமாடும் தேவதாசிகளின் வாழ்க்கைமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

தென்னிந்திய நடனம் தேவதாசிகளின் குலத்தொழிலாக இருந்து வந்தது. அவர்களுக்கு எதிரான போர்க்கொடிகளைக் கண்டால் தேவதாசி முறையே மூடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பலரும் உணர்ந்தார்கள். ஆனால், அதனால் நாட்டிய உலகில் ஏற்படப்போகும் வெற்றிடத்தை நிரப்புவது எப்படி என்று பலரும் கவலைகொண்டனர்.

ஒரு சிலர் அதற்குத் தயாராகவும் இருந்தார்கள். ஆனால், அதே சதிர் பாணியிலான அம்சத்துடன் அல்ல; தாமே ஒரு புதுப் பாணியை உருவாக்கும் எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அவர்களுள் ஒருவர் ருக்மணி தேவி அருண்டேல்.

View more on kizhakkutoday.in