Tamilசெய்திகள்

காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தின் நீரோ – குமாரசாமி தாக்கு

சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான உலக கோப்பை போட்டி நடந்தது. இதை நேரில் சென்று முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவின் நீரோ என மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குமாரசாமி கூறுகையில், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அதுபோல், இங்கு மக்கள் சிரமத்தில் உள்ளனர், கர்நாடகாவின் நீரோ கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் என குற்றம்சாட்டினார்.

கர்நாடக மாநிலம் மின்சாரப் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதல் மந்திரியும், துணை முதல் மந்திரியும் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர் என தெரிவித்தார். செயற்கையான மின் பற்றாக்குறையை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதாக கூறி கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பது என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார்.