Tamilசெய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் நாம் நாட்டினுடைய சட்டம், யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – அமைச்சர் அமித்ஷா பேச்சு

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நேற்று மேற்கு வங்காளம் சென்றிருந்தனர். மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் சென்றிருந்தனர். பா.ஜனதா அமைப்புகள், சமூக வலைத்தளம் மற்றும் ஐ.டி. பிரிவுஉறுப்பினர்களும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது அமித் ஷா “குடியுரிமை திருத்த சட்டம் நாம் நாட்டினுடைய சட்டம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மக்களை தவறாக வழிநடத்துகிறார். இந்த சட்டத்தை அமல்படுத்துவது எங்களது கட்சியின் உறுதிப்பாடு என்பதை தெளிவாக அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தாண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள 42 இடங்களில் பா.ஜனதா 35 இடங்களை பிடிக்கும். அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க நாம் பணியாற்ற வேண்டும். பா.ஜனதா என்பது ஊடுருவலை தடுப்பது, பசு கடத்தல் மற்றும் மத ரீதியாக துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சிஏஏ (குடியுரிமை திருச்ச சட்டம்) மூலம் குடியுரிமை வழங்குவதைக் குறிக்கும்.