Tamilசெய்திகள்

குரூப் 1 தேர்வுகள் முடிவு ஏப்ரல் மாதம் வெளியாகிறது – டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) மூலம் பல்வேறு அரசு பணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இதேபோல் குரூப்-7 பி மற்றும் குரூப்-8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5446 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பதவிக்கு நடந்த மெயின் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.