Tamilசெய்திகள்

‘சந்திராயன் 3’ வெற்றி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த கூகுல் சி.இ.ஓ சுந்தர் பிச்சை

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.

மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்ட செய்தியில், என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா இன்று முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.