Tamilசெய்திகள்

சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்த புதிய பி.எம்.டபிள்யூ எலெக்ட்ரிக் கார்!

பி.எம்.டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது iX1 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி மாடலை கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி இந்திய சந்தியில் அறிமுகம் செய்தது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.66.90 லட்சம், எக்ஸ் ஷோ ரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிமுகத்தை தொடர்ந்து, இதன் விற்பனை துவங்கியது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடனால iX1 விற்பனை துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தது. முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பி.எம்.டபிள்யூ iX1 இந்த ஆண்டுக்கான யூனிட்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்துள்ளது.

இந்திய சந்தையில் புதிய பி.எம்.டபிள்யூ iX1 மாடல்:

ஆல்பைன் வைட், ஸ்பேஸ் சில்வர், பிளாக் சஃபையர் மற்றும் ஸ்டாம் பே என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 10.7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எம் ஸ்போர்ட் லெதர் ஸ்டீரிங் வீல், புளு ரிங் ஃபினிஷர் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

பி.எம்.டபிள்யூ iX1 மாடலில் ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஆக்டிவ் முன்புற இருக்கைகள், மசாஜ் வசதி, ஆம்பியண்ட் லைட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் ஜோன் ஆட்டோமெடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், பவர் டெயில்கேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 66.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டூயல் மோட்டார்கள் உள்ளன.

இவை 309 ஹெச்.பி. பவர், 494 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் முழு சார்க் செய்தால் 44 கிலோ மீட்டர்கள் வரையிலான ரேஞ் வழங்கும் என்று சான்று பெற்று இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும், மேலும் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.