Tamilசெய்திகள்

செனாப் நதியில் இருந்து நீரை திறந்து விட்டது இந்தியா!

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகள் அனைத்தையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

சிந்து, சீலம், செனாப் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தையும் சமீபத்தில் இந்தியா மூடியது. இதனால் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் வழக்கமான தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்த நதிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள லால் அணைக்கட்டில் இருந்து இன்று காலை இந்தியா திடீரென தண்ணீரை திறந்து விட்டது.

5 மதகுகளில் இருந்து தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செனாப் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது பாகிஸ்தான் பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.