சென்னை 360

அண்ணா நகர் டவர்

அண்ணா நகர் இன்று சென்னையில் வாழ்வதற்கு மிகவும் வசதியான குடியிருப்புப் பகுதி. ஆனால், அதைக் குடியிருப்புப் பகுதியாக மக்களிடம் பிரபலப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி பெரும்பாலானோருக்குத் தெரியாது.

அன்றைய ஊருக்குக் கடைசியில்தான் அண்ணா நகர் அமைக்கப்பட்டது. அங்கு முதலில் சென்று குடியேறியவர்களுக்கு ஆரம்ப இரவுகளில் நரிகள் ஊளையிடும் சத்தம் பயங்கரமாகக் கேட்கும். மழைக்காலங்களில் கூவம் பெருக்கெடுத்து ஓடும்போது ஆற்றங்கரையில் இருந்து பாம்புகள் குடியிருப்புகளுக்குள் நுழையும். இதனால் மக்கள் அங்குச் செல்வதற்கே மிகவும் தயங்கினர். அந்தப் பகுதி தனித்துவிடப்பட்டதுபோல இருந்ததும் மற்றொரு காரணம். உப்பு வாங்குவதற்குக்கூட ஓரிரு மைல்கள் நடக்க வேண்டியிருக்கும். அவசரம், ஆபத்தென்றால் உதவிக்கு வருவதற்குக்கூட அருகாமையில் ஆளிருக்க மாட்டார்கள்.

நகரத்தின் மக்கள் தொகை திடீரென அதிகரித்தபொழுது, மெட்ராஸ் நகரத்தின் விளிம்பு வரை மக்கள் கூட்டம் நிரம்பும் நிலை உண்டானது. அங்கு வசிக்கும் அனைவருக்கும் இடம் பிரச்சனையானபொழுது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளத் தொடங்கியது. அப்போது நகரத்தின் குறுக்கே சென்ற இரண்டு ஆறுகள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தன.

 

View more in kizhakkutoday.in