Tamilவிளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – அஸ்வின் முதல் இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்திய அணியின் அஸ்வின் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்திலும், பும்ரா 4-வது இடத்திலும், ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளனர்.