Tamilசெய்திகள்

தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே இன்று 8வது நாளாக நடைபெற்று வரும் போரின் எதிரொலியால் தங்கம் விலை உயர்வதாக கருதப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5555-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,440-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் விற்கப்படுகிறது.