Tamilசெய்திகள்

தங்கம் விலை உயர்வு – ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமும் காணப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.320 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,835-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.