Tamilசெய்திகள்

தங்கம் விலை திடீர் குறைவு – சவரனுக்கு ரூ.528 குறைந்தது

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து ரூ.42,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.5,290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.7.50-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.