Tamilசெய்திகள்

தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக உயர்வு

இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுபோல் டாக்டர் தொழில் செய்பவர்கள் மீது, சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதன்பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது. மேற்கண்ட தகவல் டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.