Tamilசெய்திகள்

தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள் – பிரதமர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* திருச்சியில் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி.

* தொட்ட துறைகள் அனைத்திலும், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

* திருச்சி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை.

* மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.

* சென்னை- பினாங்கு, சென்னை- டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும்.

* சென்னை மெட்ரோ திட்ட பணிகளை வேகப்படுத்த, மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும்.

* தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

* சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்க வேண்டும்.

* தமிழக அரசின் கோரிக்கைகள் அரசியல் முழக்கம் அல்ல, மக்களின் கோரிக்கைகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.