Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – 426 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில்  பேட்டிங் தேர்வு செய்தது.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சரேல் எர்வீ சதமடித்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜேன்சன் 37 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

நியூசிலாந்து சார்பில் வாக்னர் 4 விக்கெட், மேட் ஹென்றி 3 விக்கெட், ஜேமிசன் 2 விக்கெட், டிம் சவுத்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் ஹோம் 120 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், ஜேன்சன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

71 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். 114 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி இழந்தது.

அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் கைல் வெரைன் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு ரபாடா, முல்டர் ஆகியோர் ஒத்துழைப்பு அளித்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கைல் வெரைன் 136 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நியூசிலாந்து சார்பில் சவுத்தி, ஹென்றி, ஜேமிசன், வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

இதையடுத்து, 426 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்து விளையாடி வருகிறது.