Tamilவிளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 20 மற்றும் 50 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது.

3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் நியூசிலாந்துக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. இந்த இரண்டு தொடரிலும் அதிவேக இளம் பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார். இந்திய ஒருநாள் அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், அர்ஷ்தீப் சிங், சக்ரன் யாதவ். மாலிக், குல்தீப் சென். இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் சிராஜ், முகமது சிராஜ், முகமது சிராஜ் குமார். சிங், உம்ரான் மாலிக்.