Tamilசெய்திகள்

பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் 30 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாநில கல்விக் கொள்கை, உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.