Tamilசெய்திகள்

போலீஸ்காரர் மீது கார் ஏற்றி கொலை செய்த செம்மரக்கடத்தல் கும்பல் – 2 பேர் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவு மவுசு இருப்பதால் செம்மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அன்னமய்யா மாவட்டம், பிலேரூ அருகே உள்ள குண்ட்ராவாரி பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அருகே உள்ள குண்ட்ராவாரி பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனை கண்ட கணேஷ் என்ற போலீஸ்காரர் காரை தடுத்து நிறுத்த முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த செம்மர கடத்தல் கும்பல் காரை கணேஷ் மீது மோதினர். இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காரில் இருந்த செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஏராளமான அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். காரில் இருந்து 7 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

செம்மர கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.