Tamilவிளையாட்டு

மாட்ரின் ஓபன் டென்னிஸ் – சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது.

இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

இதில் சபலென்கா 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.