Tamilசினிமா

மாணவர் சின்னதுரையை அழைத்து பாராட்டிய இயக்குநர் பா.இரஞ்சித்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்-2 படித்து வந்த சின்னதுரையை சாதிய மோதலால் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த அவரது தங்கை சந்திராவுக்கும் வெட்டு விழுந்தது.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன் தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், மாணவர் சின்னதுரையை நேரில் அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார். மேலும், சின்னதுரையின் கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் தனது ‘நீலம் பண்பாட்டு மையம்’ செய்வதற்கு தயாராக இருக்கிறது என்றும் பா.ரஞ்சித் உறுதியளித்துள்ளார்.