Tamilசினிமா

‘மாவீரன்’ டப்பிங் பணிகளை முடித்த நடிகர் சிவகார்த்திகேயன்

‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘மாவீரன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ‘மாவீரன்’ திரைப்படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கினார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. ‘மாவீரன்’ படக்குழு தொடர்ந்து அப்டேட்களை குவித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.