Tamilசெய்திகள்

முதலமைச்சர் கெஜ்ரிவால் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் – ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு

டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரனை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ஆனால் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது சட்ட விரோதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து நேரில் ஆஜராவதை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். 7-வது மற்றும் 8-வது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய பிறகு, நீதிமன்றத்தை நாடியது. அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரேஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்ததற்காக கைது செய்யப்படுவதை தவிர்க்க ஜாமின் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கியது. ரூ.15,000 பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.