Tamilசெய்திகள்

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஸ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.