Tamilசெய்திகள்

மோக்கா புயல் உருவானது – தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவானது.

இந்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அதிதீவிர புயலாக வலுப்பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) மியான்மர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோக்கா புயலால் தமிழகத்திற்கு பாதிப்புகள் எதுவும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பப்பட்டுள்ளது.