Tamilசெய்திகள்

மோடி அரசின் ஆட்சியில், மாநில உரிமைகளின் மீது அடி விழுவது தொடர்கிறது – ப.சிதம்பரம்

மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்து வருமாறு:-

தமிழ்நாட்டிற்கு இனி புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் ஏற்கனவே தமிழகத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் கல்வி இடங்கள் அளிக்கப்படாது என்றும் தேசிய மருத்துவக் கழகம் அறிவித்தது உண்மை என்றால், அது நல்ல செயல்பாட்டை தண்டிப்பதாக அமைந்துவிடும்.

இது, மாநில அரசு மற்றும் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்யும் மற்றுமொரு மோசமாக நிகழ்வாகும். ஏன் மாநில அரசு தனது சொந்த மாணவர்களுக்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தி புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கக் கூடாது? மத்திய அரசும் அதன் முகமைகளும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையை அறுக்கின்றன.

மோடி அரசின் ஆட்சியில், மாநில உரிமைகளின் மீது அடி விழுவது தொடர்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.