Tamilசினிமா

ரசிகர்களுடன் சேர்ந்து ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்த்த நடிகர் தனுஷ்

யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘திருச்சிற்றம்பலம்’ இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ( ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் காட்சியை சென்னை தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் தனுஷ் மற்றும் அனிருத் சேர்ந்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.