Tamilசெய்திகள்

108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் திடீர் போராட்டம்!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்களுக்குக் கடந்த 6 மாதங்களாக உரிய ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று மாலை 6 மணி வரை ஆம்புலன்ஸ் சேவைகள் முற்றிலுமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய நிலுவை விவகாரத்திற்குத் தீர்வு காணக் கோரியும், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவசர மருத்துவ உதவிக்கான 108 ஆம்புலன்ஸ்கள் இயங்காததால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.