14 பந்தில் அரை சதம் அடித்த மேகாலயா வீரர்!
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் (டி பிரிவு) மிசோரம் அணிக்கு எதிராக மேகாலயா ஆல்-ரவுண்டர் அபாய் நெகி 14 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதத்தை கடந்து பிரமிக்க வைத்தார்.
சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்பு ராபின் உத்தப்பா 15 பந்துகளில் அரைசதத்தை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
27 வயதான அபாய் நெகி 50 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அவரது அதிரடி ஜாலத்தின் உதவியுடன் மேகாலயா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.