Tamilசெய்திகள்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக கால அவகாசத்தை நீடிப்பது குறித்து பரிசீலனை செய்ய வில்லை – மத்திய அமைச்சர் தகவல்

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சில எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

2,000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் 17-க்கு முன்பு வெளியிடப்பட்டதால் அவற்றின் பயன்பாட்டு காலம் 4 முதல் 5 ஆண்டுகளே என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. பின்னர் ரிசர்வ் வங்கி நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் இவற்றின் பரிவர்த்தனைக்கு இனி முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டு கடந்த 19-5-2023 அன்றைய திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

மே 19-ம் தேதி ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த ஜூன் 30-ம் தேதி வரை ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியை (செப்டம்பர் 30) நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.