உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – ஆஸ்திரியாவை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2வது சுற்று ஆட்டம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் – ஆஸ்டிரியா அணிகள் மோதின.
முதல் பாதியின் 36வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் மிகெல் ஒயார்ஜபால் ஆட்டத்தின் முதல் கோலை பதிவு செய்தார். இதன்பின் முதல் பாதி முழுவதும் மற்றொரு கோல் அடிக்க யாருக்கும் களம் சாதகமாக அமையவில்லை.
விறுவிறுப்புடன் சென்ற 2 ஆம் பாதியில் 66வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெட்ரோ ஒரு கோலும், 89வது நிமிடத்தில் மிகெல் மற்றொரு கோலும் அடிக்க 3-0 என முன்னிலை ஸ்பெயின் முன்னேறியது.
கடைசி வரை ஆஸ்திரியா கோல் அடிக்காத நிலையில் 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் வென்றது.
