Tamilவிளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – துருக்கியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

23 மூன்றாவது உலகக் கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகிறது. 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன.

தற்போது நடைபெற்று வரும் லீக் போட்டிகளில், டி பிரிவில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – துருக்கி அணிகள் மோதின.

போட்டியின் 27 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் நெஸ்டோரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1+0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டியின் இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியாவின் கானர் மெட்கால்ப் ஒரு கோல் அடித்தார். இதனால், 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலை வகித்தது.

இதற்கிடையே போட்டி நேரம் முடிவடைந்த பிறகு, கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த 10 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி வெற்றி பெற்றது.