5 கோடி பேஸ்புக் கணக்குகள் ஹக்! – மக்கள் அதிர்ச்சி
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருக்கும் பேஸ்புக் பயனர்களின் அக்கவுண்ட்கள் செயல்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் பேஸ்புக் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :-
இந்த பாதுகாப்பு குறைபாட்டினை பேஸ்புக் நிறுவனத்தை சேர்ந்த பொறியியல் நிபுணர்கள் குழு கடந்த 25-ம் தேதி மாலை கண்டறிந்தனர். இப்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ்(View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
தங்களுடைய அக்கவுண்ட்களை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நமக்கு நாமே பார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட வசதி தான் இந்த வியூ ஆஸ் எனும் சிறப்பு வசதி.
ஆனால் இந்த வசதி பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை (security token) அம்பலப்படுத்துகிறது. அதை பயன்படுத்தி ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் பிறரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும்.
எனவே, இப்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கய் ரோசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஹேக் செய்யப்பட்ட 5 கோடி அக்கவுண்ட்கள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட்களில் உங்களுடைய அக்கவுண்டும் ஒன்றா என கண்டுபிக்டிக்க ஒரு வழி உள்ளது.
நாம் முதல்முறையாக நமது செல்போன்களில் அல்லது கணிணியில் பேஸ்புக் லாக்-இன் செய்யும் போது பார்ஸ்வேட் கொடுப்போம், பின்னர் அந்த பாஸ்வேர்டை மீண்டும் கொடுக்காமல் இருக்க சேவ் பாஸ்வேர்ட் எனும் ஆப்ஷனை கிளிக் செய்வோம். இதனால் அடுத்த முறை நமது அக்கவுண்டை லாக்-இன் செய்யும் போது பாஸ்வேர்ட் கேக்காமலேயே அக்கவுண்ட் திறக்கும்.
ஆனால், பாதுகாப்பு குறைபாட்டினால் ஹேக் செய்யப்பட்டுள்ள 5 கோடி அக்கவுண்டும், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 4 கோடி அக்கவுண்ட் என மொத்தம் 9 கோடி பேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை ஒருவர் லாக்-இன் செய்யும் போது வழக்கம் போல பாஸ்வேர்ட் இல்லாமல் பேஸ்புக் பக்கம் திறக்காது. லாக்-அவுட் நிலைக்கு வந்து நம்மிடம் மீண்டும் பாஸ்வேர்ட் கேட்கும் அவ்வாறு நமது அக்கவுண்ட் அதுவாகவே லாக்-அவுட் ஆனால் நமது அக்கவுண்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
எப்போதும் போல பாஸ்வேர்ட் இல்லாமல் உங்கள் பேஸ்புக் பக்கம் திறந்தால் அந்த 9 கோடி பேரில் நீங்களும் ஒருவர் இல்லை என தெரிந்துகொள்ளலாம்.