அதிகரித்து வரும் கடும் வெப்பத்தால் மனிதர்கள் எதிர்கொள்ள இருக்கும் புதிய ஆபத்து ! – உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை
உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization – WMO) வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சித் தகவலின்படி, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கடும் வெப்ப அலைகளும் (Heatwaves) கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயும் (Wildfires) காற்றுத் தர மேம்பாட்டு முயற்சிகளுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளன.
மேலும், காலநிலை மாற்றமும் காற்று மாசுபாடும் ஒன்றோடு ஒன்று பிணைந்து, ஒன்றை ஒன்று மேலும் தீவிரப்படுத்தும் அபாயகரமான நச்சுச் சுழற்சியாக மாறியுள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
காட்டுத்தீயில் இருந்து வெளிப்படும் புகையும், தீவிர வெப்ப அலைகளால் வளிமண்டலத்தில் தேங்கும் நச்சு வாயுக்களும் மனிதர்களின் சுவாச ஆரோக்கியத்திற்குப் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள நிலையில், இதனால் உலகம் முழுவதும் காற்றுத் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
