Tamilசெய்திகள்

முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா வீட்டை நோட்டமிட்ட இருவர் கைது

லஞ்ச புகார் தொடர்பான மோதல் முற்றிய நிலையில், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக நீக்கப்பட்டனர். அவர்களது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, அவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவின் உயரிய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சிபிஐயில் நடக்கும் விவகாரங்கள் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா இல்லத்தை சுற்றி இன்று காலை சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு பேர் நடமாடினார்.

வீட்டு சுற்றுச்சுவரை சுற்றி பதுங்கியபடி நோட்டமிட்ட இருவரையும் அலோக் வர்மா வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பிடித்துச்சென்று போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். சந்தேக நபர்கள் என்று கூறுபவர்கள் உளவுத்துறையை சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *