தெலுங்கானா அரசு போல் தமிழக அரசும் வாகன சவாரிச் சேவை செயலியை உருவாக்க கோரிக்கை வைக்க தயராகும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள்
தனியார் சவாரிச் செயலி நிறுவனங்களான ஓலா (Ola) மற்றும் உபெர் (Uber) நிறுவனங்களின் கட்டணச் சுரண்டலைக் கட்டுப்படுத்தவும், ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தெலங்கானா அரசு சொந்தமாகச் ‘சவாரிச் செயலி’ (Ride-Hailing App) ஒன்றை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
தெலங்கானா அரசின் இந்த முடிவைப் போலவே தமிழக அரசும் இதேபோன்று பிரத்யேகச் செயலி ஒன்றை உருவாக்க வேண்டும் எனப் பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. தனியார் செயலிகளின் அதிகப்படியான கமிஷன் மற்றும் திடீர் கட்டண உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரசால் இயக்கப்படும் செயலிகள் நியாயமான கட்டணத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்பதால், தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் ஆட்டோ, டேக்சி ஓட்டுநர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைக்க தயாராகி வருகின்றனர்.
