Tamilசெய்திகள்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்குத் தென்னிந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது, என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைக் காற்றானது வலுவடைந்து வருவதால், சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கான சிறந்த சூழல் நிலவுகிறது. இந்தச் சுழற்சியின் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டு, தெற்கு தமிழகத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த வாரம் தொடக்கத்தில் உருவாக வாய்ப்புள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்த விரிவான தகவல்கள் நாளை வெளியிடப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.